tamilnadu

img

8 மாதங்களில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

மும்பை;
தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகள், கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று கடும் வீழ்ச்சியை சந்தித்தது, முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அன்றைய நாளில், தேசிய பங்குச் சந்தையான ‘நிப்டி’ 11,000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்தது. மும்பை பங்குச் சந்தையும் 37 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே போனது.ஜூலை மாத காலத்தில், பங்குச் சந்தைகள் இப்படி ஒரு பெரும் சரிவை சந்தித்தது, 17 ஆண்டுகளுக்குப் பிறகுஇதுதான் முதல்முறை என்று சந்தை வல்லுநர்கள் கூறினர்.இந்நிலையில், வாரத்தின் முதல் நாளான திங்களன்று (ஆக.5) காலை இந்திய பங்குச் சந்தைகள் சற்று ஏற்றத்துடன் தொடங்கினாலும், சிறிது நேரத்திலேயே இறக்கத்தை சந்தித்தது. பிற்பகலில் மும்பை பங்குச் சந்தையான சென்செக்ஸ் 418.38புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 134.75 புள்ளிகளும் வீழ்ச்சியடைந்தன. அதுமட்டுமல்லாமல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்மதிப்பு, ஞாயிறன்று 69 ரூபாய் 60 காசுகளாக இருந்தது. இது திங்களன்று 70 ரூபாய் 522 காசுகளாக சரிந்துள்ளது. இந்த அளவிற்கான ரூபாய் மதிப்பு சரிவு என்பது, கடந்த 8 மாதங்களில் இல்லாத ஒன்று என புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.இந்தியச் சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேறுவதே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

;